சுருக்கமாக
இதற்குமேல் வீட்டிலிருக்க உன்னால் முடியவில்லை, உனக்கு வீட்டை விட்டு வெளியேற வேண்டும் போலிருக்கின்றது, ஆனால் எங்கே போவதென்று தெரியவில்லையா?
பகலோ இரவோ எந்த நேரத்திலும், உனக்கு விருப்பமெனில் உனது பெயரைக் கூறாமலேயே, எம்முடன் நீ தொடர்பு கொள்! நாமிணைந்து தீர்வைத் தேட முடியும்.
தொலைபேசி. 044 341 49 45 அல்லது மின்னஞ்சல் மூலமாக info@maedchenhaus.ch
உனக்கு உதவி தேவைப்படுகின்றதா?
- உனக்கு அடிக்கின்றார்களா?
- உன்னைப் பேசுகின்றார்களா, அவமானப்படுத்துகின்றார்களா அல்லது தரக்குறைவாக நடாத்துகின்றார்களா?
- பாலியல்வன்முறைக்காளாக்கப்படுகின்றாயா?
- உன்னை யாராவது தடுத்து வைத்திருப்பதுடன், நண்பிகள், நண்பர்களுடன் நீ தொடர்புகொள்வதைத் தடை செய்கின்றார்களா அல்லது உனது கைத்தொலைபேசி கண்காணித்துப் பரிசீலிக்கப்படுகின்றதா?
- திருமணம் செய்யும்படி நீ நிர்ப்பந்திக்கப்படுகின்றாயா?
- உனக்கு ஏதாவது செய்வோம், உன்னைக் கொலை செய்வோம் அல்லது உன்னைத் தாய்நாட்டிற்கு திருப்பியனுப்புவோம் என்று யாராவது உன்னைப் பயமுறுத்துகின்றார்களா?
மேலதிக வன்முறை இடம்பெறாமல் பாதுகாப்பாக இருந்துகொண்டு, உனது நிலையை நீ அமைதியாகவிருந்து சிந்திக்கக் கூடிய ஓர் இடத்தை சிறுமிகள்காப்பகம் உனக்கு வழங்குகின்றது. குழுவிலுள்ள பெண்கள் உனது உரிமைகள் பற்றியும், வாய்ப்புகள் பற்றியும் உனக்குத் தகவல் தருவார்கள். தொடர்ந்து வரும் அனைத்து நடவடிக்கைகளிலும் அவர்கள் உன்னை வழிநடத்துவார்கள். பெரிய, சிறிய, பருத்த, மெலிந்த, இருபாலினச்சேர்க்கையிலீடுபடுகின்ற, பெண்பாலினச்சேர்க்கையிலீடுபடுகின்ற, சோகமான, சந்தோசமான 14 வயதுக்கும் 20 வயதுக்குமிடைப்பட்ட அனைத்துச் சிறுமிகளுக்கும் இளம்பெண்களுக்குமாக, சிறுமிகள்காப்பகமும் ஆலோசனைமையமும் திறந்திருக்கின்றது. சுவிஸ் பெண்களும் வெளிநாட்டுப் பெண்களும் நகரத்தவராயினும் கிராமத்தவராயினும் - அனைவரும் மனப்பூர்வமாக வரவேற்கப்படுகின்றீர்கள்!










